-மன்னார் நிருபர்
(27-04-2022)
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று புதன்கிழமை (27) மதியம் வழங்கி வைக்கப்பட்டது.
-கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைபவ ரீதியாக வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட ஜெயபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு ஜெயபுரம் பொது மண்டபத்தில் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-சுமார்3350 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கிராம சேவையாளர்கள், சமூக பணியாளர்களுடன் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை கருத்தில் கொண்டு மன்னார் ,வவுனியா ,முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கு நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் தீவக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர் களும் கலந்து கொண்டார்கள்.