கனடா வாழ் செந்தில்குமரனின் நிவாரணம் அமைப்பின் ஊடாக தாயக மண்ணில் உயிர் காக்கும் 88வது சத்திர சிகிச்சை செய்யப்பெற்ற கிளிநொச்சி 19வயது நிவேதன் தற்போது வைத்தியசாலையில் தேறி வருகின்றார்.
இதன் மூலும் மேலுமொரு இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது!
இது கனடா நிவாரணம் அமைப்பினால் தாயகத்தில் மேற்கொள்ளப்பெற்ற 88 வது சத்திர சிகிச்சையாகும். கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த நிவேதனுக்கு (வயது 19) சத்திர சிகிச்சை நடைபெற்று இருதயத்தின் இரு வால்வுகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த இளைஞனுக்கு ஆறு மாத காலத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் இல்லையென்றால் உயிராபத்து என்ற நிலையிலேயே இவருக்கான சிகிச்சை உடனடியாக நடைபெற்றது. இவரது தாயார், கணவர் பிரிந்து சென்றபின் தனியாக நான்கு பிள்ளைகளை வளர்த்து கொண்டிருக்கிறார். வறுமையின் சூழ்நிலையில் தத்தளித்த இந்த குடும்பத்திற்கு 15 லட்சம் என்பது எட்டாக்கனி. இது நிவாரண அமைப்பின் 88 வது உயிர் காக்கும் சத்திர சிகிச்சை! உடல் நலம் தேறி வரும் அவருக்காக இறைவனை வேண்டுவோம்! நன்றி!
– இவ்வாறு கனடா வாழ் ‘நிவாரணம்’ செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.