ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற தனது கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ. தமிழரசி நன்றி தெரிவிப்பு ” தமிழகத்திலிருந்து கடல் கடந்து கனடாவிற்கு வருகை தரும் என் போன்ற எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கலைஞர்களையும் வரவேற்று மதிப்பளிக்கும் தமிழ்க் கனடிய உள்ளங்களைப் பாராட்டுகின்றேன்.. இந்த மண்ணில் வாழும் அனைத்து படைப்பாளிகளையும் அத்துடன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்களையும் மற்றும் இங்கு தங்கள் நேரங்களை ஓதுக்கியும் அன்பளிப்புக்களை வழங்கியும் ஆதரவு வழங்குகின்ற அன்பான வர்த்தக உள்ளங்களையம் நான் பாராட்டுகின்றேன்”
இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும் தமிழாசிரியருமான அ. தமிழரசி அவர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெற்ற தனது கவிதை நூல்களான ; தேடல் சுகமானது மற்றும் உடைத்தெழும் விதைகள் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் நன்றியுரையாற்றும் போது தெரிவித்தார்
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் தலைவர் கவிஞர். கந்த. ஸ்ரீபஞ்சநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வெளியீட்டு விழாவில் முதலில் மங்கல விளக்கேற்றல் வைபவம் .இடம்பெற்றது.
தழிழ்த்தாய் வாழ்த்தையும் கனடிய தேசிய கீதத்தையும் செல்வி. சரிகா நவநாதன் இசைத்தார்.
தலைமையுரையாற்றிய கந்த ஶ்ரீ பஞ்சநாதன் அவர்கள் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தினை மதித்து இந்த வெளியீட்டு விழாவினை நடத்தும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்த நூலாசிரியருக்கும் ஆர். என். லோகேந்திரலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்து ஆற்றலுள்ள தமிழகக் கவிஞர்களை வருகை கனடாவில் வாழும் கவிஞர்களுக்கு உற்சாகம் தரும் விடயமாகும் என்றார்.
வாழ்த்துரையை எழுத்தாளரும் கவிஞரும் கனடா தமிழ் மகளிர் மன்றத்தின் தலைவியுமாகிய திருமதி சரசுவதி அரிகிஷ்ணன் மற்றும் கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் ஆகியோர் ஆற்றினார்கள்.
தொடர்ந்து கவிதை நூல் ஒன்று: தேடல் சுகமானது ஆய்வுரை ஐயு கவிஞர் அருட்கவி த. ஞானகணேசன் (முன்னாள் தலைவர் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம்) மற்றும் உடைத்தெழும் விதைகள் என்னும் கவிதை நூலின் ஆய்வுரையை உலகச் சாதனையாளர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களும் நிகழ்த்தினர்
தொடர்ந்து சிறப்புரை வழங்க கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள் மேலும் வாழ்த்துரையை மருத்துவர் போல் ஜோசேப் வெளியீட்டு உரையை கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் பொருளாளரும் கவிஞருமாகிய கவிஞர் கண. குமரகுரு நிகழ்த்தினார் அடுத்து முதற்பிரதிகள் வழங்கப்பெற்றன.
முதற் பிரதி பெற்றவர்கள் (தேடல் சுகமானது)
திரு. தனம் கனகரத்தினம் (கணக்காளர்)
(உடைத்தெழும் விதைகள் )
திரு. நவநாதன் பெரியதம்பி (சமூகசேவகர், வர்த்தகப் பிரமுகர்) ஆகியோர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
திரு பாஸ்கரன் சின்னத்துரை (வீடு விற்பனை முகவர்)
திரு. கோபாலகிருஸ்ணன் செல்லத்துரை (அம்மா அடைவு மாடம்)
திரு விசு கணபதிப்பிள்ளை (மக்கள் தொண்டர் சமூக சேவகர்) திரு குமார் தம்பியப்பா – கணக்காளர் திருமதி வாசுகி நகுலராஜா அவரது துணைவர். திரு நகுலராஜா.
திரு ராதா கிருஸ்ணசாமி வர்த்தகப் பிரமுகர் உட்பட பலர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நூலாசிரியரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நன்றியுரையை நூலாசிரியர் அ. தமிழரசி அவர்கள் சிறந்த முறையில் வழங்கி அனைவரும் நேர்த்தியான முறையில் நன்றியை பகிர்ந்தார்.