மன்னார் நிருபர்
23-05-2022
மன்னாரில் இன்று திங்கட்கிழமை(23) அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்புவதற்கும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இன்று அதிகாலை லிற்றோ நிறுவனத்தின் ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவற்றை பெறுவதற்கு நேற்று நள்ளிரவும் முழுவதும் மக்கள் வரிசையில் நின்று அதிகாலை பெற்று சென்றனர்.
அதே நேரம் மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானவர்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்