மன்னார் நிருபர்
30-05-2022
சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (31) காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது.
மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்ட படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது
எனவே பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.