நேற்றைய ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் அதிபெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் டக் போர்ட்
நேற்று 2ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் அதிபெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி கொன்சர்வேர்ட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதோடு கட்சியின் தலைவர் டக் போர்ட் அவர்கள் முதல்வராகத் தெரிவானார்.
இந்த செய்தி இன்று அதிகாலை எழுதப்படும் போது முதல்வர் டக் போட் அவர்களின் கொன்சர்வேட்டிவ் கட்சி மொத்த 124 ஆசனங்களில் 83 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 31 ஆசனங்களையும். லிபரல் கட்சி 8 ஆசனங்களையும் ஒன்றாரியோ பசுமைக் கட்சி ஒரு ஆசனத்தையும் சுயேச்சை வேட்பாளர் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த தேர்தலில் போட்டியிட்ட கொன்சர்வேர்ட்டிவ் கடசியின் ; தமிழ் பேசும் இரு தமிழ் பேசும் வேட்பாளர்களான லோகன் கணபதி (மார்க்கம்- தோர்ன்ஹில்- ) விஜய் தணிகாசலம் (ஸ்காபுறோ- ரூஜ் பார்க்.) ஆகியோர் மீண்டும் வெற்றியை ஈட்டிக் கொண்டனர்.
அத்துடன், தமிழ் பேசும் மக்களின் ஆதரவை அதிகளவில் பெற்றவர்களான இருவர் இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றியீட்டியுள்ளனர். ஸ்காபுறோ- அஜின்கோர்ட் தொகுதியில் அரிஸ் பாபிகியன் அவர்களும். ஸ்காபுறோ-வடக்கும் தொகுதியில் அமைச்சர் றேமன்ட் சோ அவர்களும் வெற்றிவாகை சூடியுள்ளனர்