(மன்னார் நிருபர்)
(03-06-2022)
இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளருமான ப.ஞானராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பாடசாலை உதை பந்தாட்டத்தை திட்டமிட்டு வழி நடத்தி சர்வதேச மட்டத்தில் தரமுயர்த்த தகுதியான மேற்பார்வை மற்றும் பொறுப்பு கூறும் தரத்தில் அதிகாரியை புதிய 03/2021 சுற்று நிருபத்திற்கமைய நியமிக்க, இலங்கை மத்திய கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியாக SLEAS அதிகாரிகளிரமிருந்து விண்ணப்பம் கோரி, நேர்முகத் தேர்வு நடத்தியது.
குறித்த நேர்முகத் தேர்வில் இலங்கையிலிருந்து ஒரே ஒரு தமிழனும் மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட லீக் செயலாளரும், உதை பந்தாட்டத்தில் சகல துறை விற்பன்னருமாகிய ப.ஞானராஜ் விண்ணப்பித்து , நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு , இலங்கை மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.