(மன்னார் நிருபர்)
(07-06-2022)
நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்களுக்கான பெற்றோலை கொள்வனவு செய்ய இன்று செவ்வாய்க்கிழமை (7) மதியம் முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
-மன்னார் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோலை பெற்றுக் கொள்ள மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி மற்றும் கார் ரக வாகனங்களில் வருகை தந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தமது வாகனங்களுக்கு தேவையான பெற்றோலை பெற்றுக் கொண்டனர்.
-மேலும் நாட்டில் நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை பாரிய அளவில் அதிகரிக்கப்பட வுள்ளதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பெற்றோலை பெற்றுக் கொள்ள மன்னாரில் வாகன உரிமையாளர்கள் முந்தி அடித்துக் கொண்டனர்.
-மேலும் மன்னாரில் லிற்றோ எரிவாயு விநியோகம் கடந்த பல நாட்களுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் பாவனையாளர்கள் எரிவாயுவை பெற்றுக் கொள்ள நாளாந்தம் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன் ஒன்று கூடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன்னாரில் உள்ள லிற்றோ எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான முடிவடைந்த எரிவாயு சிலிண்டர்களை வீதிக்கு அருகில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
-ஏனைய மாவட்டங்களில் பல முகவர்கள் ஊடாக பல நூற்றுக்கணக்கான லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
-எனினும் மாவட்டத்தில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயு வினியோகிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.