மன்னார் நிருபர்
(08-06-2022)
சிலாவத்துறையில் மிக நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட தாய் – சேய் நிலையம் இன்று (8; திகதி ) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
LDSP விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முசலிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடம் இதுவாகும்.
முசலி பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், முசலி பிரதேச செயலாளர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி, சிலாவத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், சிலாவத்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தாய்மார்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிலாவத்துறை தாய் – சேய் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு முசலி பிரதேச சபையினால் இன்று முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது