தமிழ் மொழியின் வாழ்வே தமிழரின் வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள தமிழ் மொழி வாரம் தொடர் நிகழ்வுகள் கனடாவின் ரொறன்ரோ மாநகரிலும் அதனை அண்டியுள்ள ஏனைய சிறு நகரங்களிலும் நடைபெறவுள்ளன. 26-06-2022 அன்று ஆரம்பமாகவுள்ள இந்த தமிழ் மொழி வாரம் தொடர் நிகழ்வுகளை நடத்துவதன் நோக்ங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் ஆகியவை தொடர்பாக கனடாவில் உள்ள தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அறியத்தரும் நோக்குடன் 3ம் திகதி வெள்ளிக்கிழமை கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சுப்பிரமணியம் இராசரத்தினம் மேற்படி நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
மேற்படி தமிழ் மொழி வாரத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு அமைக்கப்பெற்ற செயற்குழுவின் அங்கத்தவர்கள் பலரும் அங்கு கலந்து கொண்டு விபரங்களைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு கலந்து கொண்ட ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசியர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கனடா உதயன் பத்திரிகையின் சார்பில் அதன் பிரதம ஆசிரியரும் ‘யுகம் வானொலி; மற்றும் நினைவுகள்.கொம் ஆகிய ஊடகங்களின் நிறுவனர்களும் அங்கு கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து சந்திப்புக்களில் கலந்து கொண்டு செயற்பாடுகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்
இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
தமிழ் மொழி வாரம் – 2022
June 26th – July 2nd, Toronto, Canada
தமிழ்மொழி வாரம்
தமிழ்மொழி வாரத்தினைச் சிறப்பாக முன்னெடுப்பதடற்காகச் செயற்குழு கூடி எடுத்த முடிவுகளிற் சில:
1. தமிழ்மொழி வாரம் 2022 இல் யூன் 26 முதல் யூலை 2 வரை இடம்பெறும்.
2. ஊடகங்கள் வாயிலாகப் பின்வரும் நோக்கில் பரப்புரையை மேற்கொள்ளல் சிறந்ததென நம்புகிறோம். (தமிழ் மொழியில் புலமையான, ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் தமிழ் கற்ற மாணவர்களின் பங்கு உங்கள் நிகழ்ச்சிகளில் தேவையாயின் நாங்கள் உங்களுக்கு அவர்களின் தொடர்புகளை எடுத்து தருவோம்.)
அ) புலம்பெயர் நாடுகளில் ஒருவர் தமிழ்மொழியைக் கற்பதால் ஏற்படும் நன்மைகள்:
அ) தனிப்பட்ட முறையில்
ஆ) குடும்பத்தில்
இ) தன் இனத்தில்
ஈ) வாழும் சமூகத்தில்
ஆ) கனடாவில் தமிழ்மொழி கற்றலின் பயன்கள்
இ) தமிழ்மொழியைக் கற்காவிட்டால் ஏற்படும் தீமைகள்
ஈ) குழந்தைகளும் மொழி கற்றலும்
உ) வீட்டு மொழியைத் தமிழ்மொழியாக வைத்திருப்பதால்
ஏற்படும் குடும்ப மேம்பாடு
ஊ) தமிழ்மொழியின் சிறப்பியல்புகள்
எ) தமிழ் வரலாறு
ஏ) தமிழ்மொழி வழியே பண்பாடு
ஐ) தமிழர் வாவியலில் தமிழ்மொழியின் பங்கு
ஒ ) தமிழ்மொழி கற்பது கடினமா?
(இந்த இடத்தில், எங்கள் படிமுறை தமிழ் என்ற கற்பித்தல் முறை முக்கிய பங்களிக்கிறது. வழமையாக தமிழை முதல் மொழியாக கற்பிக்கும் முறையில் 247 எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிப்பார்கள். ஆனால் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடையம் என்ன வென்றால், தமிழ் என்பது அசைகளை அத்திவாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட மொழி. ஆதலால் அந்த புரிதலோடு தமிழில் உள்ள 28 ஒலிகள் எப்படி அசைகளாகின்றன என்பதை கற்பிப்பது முக்கியம். இரண்டாம் மொழியாக தமிழைக் கற்கும் மாணவர்களுக்கு, மொழி இயல் வாயிலாக மொழியை கற்றல் இலகுவாக இருக்கும். இவ் வழியில் கற்பிப்பது தான் படிமுறை தமிழ் என்னும் புதிய கற்பித்தல் முறையின் நோக்கம்.)
ஓ) தமிழ்மொழி கற்பித்தலில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கடமைகள்.
ஒள) தமிழர் கலைகள்
மேற்கூறப்பட்ட நோக்கில் ஆக்கங்களைத் தயாரித்து வெளிப்படுத்தல். மேலும்
. தமிழ் மொழி வரம் நடைபெறும் வாரத்தில், தமிழ் மொழி வாரச் சிறப்பிதழாகத் தங்கள் பத்திரிகையை வெளியிடல்.
3. வானொலிகள், தொலைக்காட்சிகள்:
அ) நாள்தோறும் மேற்குறிப்பிடப்பட்ட நோக்கில் நிகழ்ச்சிகளை யூன் 26 – யூலை 2 வரை குறைந்தது 30 நிமிடங்களாவது நடத்துதல்.
ஆ) யூன் 26 – யூலை 2 வரைநடைபெறும் நிகழ்ச்சிகளை முழுமையாக ஒலி, ஒளி பரப்புதல்.
4. தமிழ்மொழி வாரத்தின் மாலை நேர நிகழ்ச்சிகளைப் பின்வரும் நிறுவனங்கள் பொறுப்பு ஏற்று நடத்துதல்.
திகதி & நேரம்
நிகழ்ச்சி
இடம்
யூன் 28th, 2022
இரவு 7 மணி முதல் 9 மணி வரை
வல்லுநர்கள் உரையாடல் மற்றும் பார்வையாளர்களோடு கேள்வி பதில்
Pickering High School 180 Church Street North, Ajax, ON L1T2W7 Canada
யூன் 30th, 2022
இரவு 7 மணி முதல் 9 மணி வரை
வல்லுநர்கள் உரையாடல் மற்றும் பார்வையாளர்களோடு கேள்வி பதில்
கனேடியத் தமிழ் சங்கம்
2370 Midland Avenue, A8 Scarborough ON M1S 5C6
யூலை 2nd, 2022
மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
நிறைவு நாள் மேடை நிகழ்ச்சி + பரிசளிப்பு விழா
Mary Ward CSS
3200 Kennedy Rd, Scarborough, ON M1V 3S8
தொடர்புகொள்வதற்கு:
இலக்கம் – (416) 869 – 8252
மின்னஞ்சல் – Info@padimuraitamil.com