கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபை அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வும் 2022 யூலை மாதம் முற்பகுதியில் நிகழ இருக்கின்றது. நிர்வாக சபை அங்கத்தவர்களைத் தெரிவு செய்வது, வழமைபோல முற்கூட்டியே இடம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
பின் வரும் 11 பதவிகளுக்கு யாப்பின் விதிகளுக்கு ஏற்பத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர்
பொருளாளர் மற்றும் 6 நிர்வாகசபை உறுப்பினர்.
ஆயுட்கால உறுப்பினர்கள் வாக்களிக்கவும், நிர்வாகசபை நியமனத்திற்கும் தகுதியானவர்கள். ஏனைய சாதாரண உறுப்பினர்கள் தகுதி பெறுவதற்கு 3 வருட சந்தாப்பணம் செலுத்த வேண்டும். கோவிட் காரணமாகச் சந்தாவைப் புதுப்பிக்காத அங்கத்தவர்கள் ஒரு வருடத்திற்குப் 15 கனடிய டொலர் படி 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2022, 2023, 2024 ஆம் ஆண்டு யூன் மாதம் வரை 3 வருட சந்தாப் பணமான டொலர் 45.00 செலுத்தி, அல்லது ஆயுட்கால சந்தாவைச் செலுத்தி வாக்களிக்கும் தகுதியையும், நிர்வாகசபை அங்கத்துவ நியமனத்திற்கான தகுதியையும் பெற்றுக் கொள்ளலாம்.
சந்தாப்பணம் செலுத்துவதற்கான கடைசித் திகதி: 27-6-2022
நிர்வாகசபை அங்கத்தவர் தெரிவுக்கான கடைசித் திகதி: 28-6-2022
பொருளாளர் வெளிநாடு சென்றிருப்பதால், சந்தாப் பணத்தை நேரடியாக செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களிடம் யூன் மாதம் 27 ஆம் திகதிக்கு முன் செலுத்திப் பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அங்கத்தவ நியமனத்திற்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பப் பத்திரத்தை நிரப்பி யூன் மாதம் 28 ஆம் திகதி இரவு 11 மணிக்கு முன்பாக மின்னஞ்சல் மூலம் செயலாளருக்கும், தலைவருக்கும் அனுப்பி வைக்கவும். அதன் பின் கிடைக்கும் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 2022 யூலை மாதம் முற்பகுதியில் நிகழ இருக்கும் பொதுக்கூட்டத் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
குரு அரவிந்தன்
தலைவர்.
kuruaravinthan@hotmail.com
ஆர். என். லோகேந்திரலிங்கம்
செயலாளர்
lnagamany@yahoo.com