எதிர்வரும் 26-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Hilton Toronto/ Markham Suites Conference Centre இல் நடைபெறவுள்ள Misss Tamil Universe -2022 போட்டி நிகழ்வுக்காக இலங்கையிலிருந்து வந்துள்ள பத்துக்கு மேற்பட்ட இளம் பெண் போட்டியாளர்கள் தற்போது போட்டி தொடர்பான பயிற்சிகளிலும் சந்திப்புகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இங்கே காணப்படும் படத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் AGA Beauty Academy நிறுவனத்தின் அதிபர் திருமதி சசிகலா நரேன் மற்றும் பிரதான அனுசரணையாளர்கள் உதவியாளர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் நோர்த் யோர்க் நகரில் இடம் பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் ஒன்றாக எடுத்துக்கொண்ட படம் இங்கு காணப்படுகின்றது.
(படம் ஐயா4யூ)