கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ 29-05-2022 அன்று வெளிவருவதற்கு பல வழிகளில் ஆதரவு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் படைப்பாளிகள் என பலருக்கு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்கள் இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதிகளை நேரடியாகக் கையளித்து வருகின்றார்
அந்த வரிசையில், தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் வவுனியா வாழ் எழுத்தாளரும் தொடர்ச்சியாக சிறுகதை மற்றும் நாவல்களை எழுதி நூல்களையும் வெளியிட்டுள்ளவரும் இலங்கை மின்சார சபையின் மின்சாரப் பொறியியலாளருமான திருமதி மைதிலி தயாபரன் அவர்களுக்கு. வவுனியாவில் உள்ள அவர் இல்லத்தில் இலங்கைச் சிறப்பிதழ் பிரதியொன்றை கையளிப்பதைக் காணலாம்..
படங்களில் வீரகேசரி முன்னாள் வார இதழ் பிரதம ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான வி. தேவராஜ் மற்றும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஓய்வு நிலை உப பீடாதிபதியுமான ந. பார்த்திபன் அவர்கள் ஆகியோர் கூட நிற்பதையும் காணலாம்.
(படங்கள்: பிரகாஸ் . கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி)