வடக்கு – கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக நாளை 17ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு- கிழக்கில் பலர் உள்ளனர். மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களை மிக வண்மையாக கண்டிக்கின்றோம்”
‘அது மாத்திரம் அன்றி இவ்வாறானவர்களை கண்டணத்திற்குள்ளாக்கும் வகையில் நாளை காலை 09. 30 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெறும் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்துள்ளதாக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இதேநேரம் நாளைய ஆரப்பாட்டத்தில் பங்குகொள்வோர் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஓர் ஒன்றுகூடலை மேற்கொண்டு இந்த ஊழல்வாதிகளை விரட்ட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலின் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்தில் மேற்கொள்ளும் போராட்ட வடிவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.