(மன்னார் நிருபர்)
(18-07-2022)
மன்னார் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை யினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை (18) மதியம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் அன்ரன் மெரின் குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு( யூரியா) உரம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
-ஒரு ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 40 கிலோ யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டது.
-205 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் முதல் கட்டமாக 101 மெற்றிக்தொன் யூரியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
-மேலும் கமநல வங்கியினால் சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் 25 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் , விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.