ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது
ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான பாடசாலை மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது. இதற்காக ஏற்பாடுகளை ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சு செய்து வருவதாக மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெற்சே அவர்கள் நேற்று செவ்வாய்கிழமையன்று பல்லின பத்திரிகையாளர்களோடு நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
இணையவழியாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சருடன் அவரது இரண்டு பாராளுமன்றச் செயலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் பணிகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களோடு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவற்றுள் முக்கிய விடயமாக ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவைப்படும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமது அரசாங்கமும் அமைச்சும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் இதற்காக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்.
மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் பற்றி மாணவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டி நிகழ்ச்சிகள் மூலம் சத்தான உணவை வழங்கும் நடவடிக்கைகள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்
எதிர்வரும் புதிய கல்வி ஆண்டில் நாம் அறிமுகம் செய்யவுள்ள ‘மீளப் பெறுவோம்’ என்னும் புதிய திட்டத்தின் பிரகாரம் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பயன் பெற நாம் பக்க பலமாக இருப்போம். இந்த திட்டத்தின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தின் மாணவர்கள் பல புதிய விடயங்களை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள வழிகள் திறக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கற்றல் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கருதியே இந்த சத்துணவு திட்டத்தின் குறிக்கோள் திட்டமிடப்பட்டதாகவும் . சத்தான உணவை மாணவர்கள் மற்றுமு; குழந்தைகள் உண்ணும் போது அவர்கள் கற்றுக்கொள்ளவும் கற்றலில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் பாடசாலைகளில் பசியுடன் இருக்கும்போது படிப்பதில் சிரமங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் மற்றும் நாம் நடத்திய கலந்துரையாடல்கள் காட்டுகின்றன..
மேலும் கொரோனா வைரஸ் காரணமாகவும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும்
கோவிட்-19 காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்ட காலங்களிலும் கோடைக்காலம் முழுவதிலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த சத்துணவுத் திட்டம் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய மாற்றங்களைச் செய்து வருகிறோம். ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சித் தளத்திலும் அனைத்து மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் அவர்களது முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும் என்று நாம் கருதுகின்றோம்..
இந்த திட்டத்திற்கு எவ்வாறு பங்களிப்பது அல்லது தன்னார்வத் தொண்டு செய்வது என்பது பற்றிய தகவல் நிரல் நிர்வாகம் மற்றும் மானியங்களை பதினான்கு முன்னணி நிறுவனங்கள் மேற்பார்வையிடுகின்றன. அவர்கள் நிதி திரட்டலை ஆதரிக்கிறார்கள், திட்ட ஆதரவாளர்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குகிறார்கள் மற்றும் உள்ளூர் திட்டங்களை ஆதரிக்க சமூக கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
உள்ளூரில் நிதி திரட்டல் மாணவர் ஊட்டச்சத்து திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் சமூகத்தில் உள்ள திட்டங்களுக்கு எவ்வாறு பங்களிப்பது அல்லது தன்னார்வத் தொண்டு செய்வது என்பதை அறிய, உங்கள் உள்ளூர் முன்னணி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில். எமது பாடசாலைகளில் தொழில் முறைக் கல்வியையும் நாம் ஊக்குவிக்க முயலுகின்றோம். தற்போது தொழிற் சந்தையில் தொழில் நுட்பத் தர பணியாளர்களுக்கு அதிக தட்டுப்பாடுகள் நிகழ்கின்றன. எனவே தொழிற் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் அதிக சம்பளம் பெறும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஒன்றாரியோ வாழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் தொழிற் கல்வி மூலம் பயன்பெற நாம் வழிகாட்டவுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் எமது மாகாணத்திற்கு புதிதாக வரும் புதிய குடிவரவாளர்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொள்ளவும் நாம் வழி சமைக்கவுள்ளோம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமல்ல அவர்களின் பெற்றோரும் தகுந்த ஆங்கிலக் கல்வியை இணைந்து பெற்றுக்கொள்ளவும் நாம் திட்டங்களை வழங்கவுள்ளோம்.இசை அனைத்தும் வரும் புதிய கல்வி ஆண்டில் நாம் அறிமுகம் செய்யவுள்ள ‘மீளப் பெறுவோம்’ என்னும் புதிய திட்டத்தின் பிரகாரம் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பயன் பெற நாம் பக்க பலமாக இருப்போம் என்றார் அமைச்சர்.