இலங்கையின் Lion Brewery பியர் தயாரிப்பு நிறுவனம் ரொறன்ரொ பியர் திருவிழா-2022 இல் பங்குபற்றியது
கடந்த 23-07-2022 சனிக்கிழமையன்று கனடாவின் ரொறன்ரொ மாநகரில் 100 Prince Edward Island Crescent , Toronto என்னும் விலாசத்தில்அமைந்துள்ள BANDSHELL PARK மைதானத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற ரொறன்ரோ பியர் திருவிழா-2022 இல் இலங்கையின் Lion Brewery பியர் தயாரிப்பு நிறுவனம் ரொறன்ரொ பியர் திருவிழா-2022 இல் பங்குபற்றியது.
ஆயிரக்கணக்கான பியர் பிரியர்கள் Lion Brewery பியர் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனைச் சாவடிக்கு வருகை தந்து இலங்கைத் தயாரிப்புக்களை விருப்பத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.
இங்கே காணப்படும் படங்களில் Lion Brewery பியர் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனைச் சாவடியில் மக்கள் வரிசையில் சென்று பியர் மற்றும் ஸ்டவுட் பானங்களை வாங்கி அருந்துவதையும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த Lion Brewery பியர் தயாரிப்பு நிறுவனத்தின் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர்- Business Development Manager -Mr. Charuka Senanayake மற்றும் கனடியப் பிரதிநிதி Fred Levon ஆகியோர் மகிழ்ச்சியுடன் நிற்பதையும் காணலாம்.