(29-07-2022)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஏழு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
6, 7, 8, 9 ஆம் இலக்க வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களை இன்று அதிகாலை 5 மணி அளவில் யானையின் தாக்குதலுக்குள்ளாகின.
யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டு வீதியை கடந்து சென்றுள்ளதாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டாக்காலி யானைக் கூட்டங்களினால் சேதமாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் மூன்று வாகனங்கள் முற்றாகவும் 4 வாகனங்கள் சிறிதளவு சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.