கனடாவில் ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதை
சேர்விஸ் ஒன்றாரியோவைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் திருடப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உதவினார்கள் என்ற குற்றசாட்டில கைது
கனடாவில் ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதைக்கு உதாரணமாக ஒன்றாரியோ அரச திணைக்களமான சேர்விஸ் ஒன்றாரியோவைச் சேர்ந்த பணியாளர்கள் நால்வர் குழுவாகச் சேர்ந்து சட்டத்திற்கு முரணான வகையில் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தார்கள் என்று விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது
இந்த பதவித் துஸ்பிரயோகம் செய்த சேர்விஸ் ஒன்றாரியோவைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் திருடப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உதவினார்கள் என்ற குற்றசாட்டில கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அறியப்படுகின்றது.
சர்வீஸ் ஒன்றாரியோவின் நான்கு ஊழியர்கள், சட்டவிரோதமாக திருடப்பட்ட வாகனங்களைப் பதிவுசெய்த குற்றவியல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் – நேற்று வியாழக்கிழமை ஒன்றாரியோ மாகாணப் பொலிசாரின் அறிவிப்பின் பிரகாரம் இந்த கூட்டுத் துஸ்பிரயோகம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பெற்றுள்ளது.
ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை (OPP) செப்டம்பர் 2020 இல் இந்த வாகனத் திருட்டு தொடர்பான விடயங்களை கண்டறிய Project Myra என்று பெயரிடப்பெற்ற புலனாய்வை அறிமுகப்படுத்தியது, ரொறன்ரோ பெரும்பாகத்தின் முழுவதும் கார் திருட்டு அலைகள், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் வாங்குபவர்களுக்கு மறுவிற்பனை செய்வதற்கு முன் திருடப்பட்ட வாகனங்களை மாற்றியமைக்கும் மோசடி நடைமுறைகள் உட்பட பல அதிகார வரம்பிற்கு உட்பட்ட நடவடிக்கையாக காணப்பட்டன
இருபத்தி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கூட்டு நடவடிக்கை $12 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 214 வாகனங்களை கடும் நடவடிக்கைகளுக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்டெடுத்ததாக ஒன்றாரியோ மாகாண காவல்துறை அறிவித்தது.
குறிப்பாக, ப்ராஜெக்ட் மைரா,புலன் விசாரணைத் திட்டத்தின் படி. திருடப்பட்ட வாகனங்களை மறு- விற்பனை செய்வதற்கும், மோசடியான சூழ்ச்சிகள் மூலம் பதிவுசெய்து, தனிநபர்கள், மற்றும் நீண்டகாலமாக இயங்கிவரும் பிற குற்றவியல் குழுக்கள் அல்லது தங்கள் சொந்த உபயோகத்திற்காக அவற்றை மீண்டும் விற்பதற்குமாக இயங்கிவந்த மூன்று தனித்தனி மோசடி மற்றும் குற்றவியல் அமைப்புகளை கண்டுபிடித்ததாக ஒன்றாரியோ மாகாண காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது
ஒன்றாரியோவின் டர்ஹாம் பிராந்தியத்தில் உள்ள குற்றவியல் குழு சஸ்காட்செவனில் மாகாணத்தில் திருடப்பட்ட வாகனங்களைப் பதிவுசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதற்கு முன்பு புதிய பதிவு மற்றும் மறுவிற்பனைக்காக சட்டவிரோத ஆவணங்களை ஒன்ராறியோவிற்கு மாற்றியது. யோர்க் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு குற்றவியல் குழு குறிப்பாக விலை அதிகம் கொண்ட உயர்தர வாகனங்களை குறிவைத்தது, மேலும் மூன்றாவது மோசடிக்குழு யோர்க் பிராந்தியத்தில் இயங்கிவந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஒன்றாரியோ மாகாண காவல்துறையின் உயர் குற்றவியலைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரி அண்ட்ரு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் . ஒன்ராறியோவில் திருடப்பட்ட வாகனங்களை மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தின் இயந்திர இலக்கங்கள் மூலம் பதிவு செய்ததில் மூன்று குற்றவியல் வலையமைப்புகளுக்கு உதவியதற்காக ரொறன்ரோ பெரும்பாக்த்தில் இல் சர்வீஸ் ஒன்றாரியோ வின் அலுவலகங்களில் பணியாற்றி நான்கு பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இந்த மோசடி வலையமைப்பில் மொத்தம், 28 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உட்பட 242 குற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர்களில் ஐந்து பேர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர் என்றும் மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், என்றும் அறியப்பட்டுள்ளது. இந்த மாதமும் அடுத்த மாதமும் பல்வேறு ஒன்ராறியோ மற்றும் சாஸ்கடூன் மாகாண நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
“தற்போது ரகசியமாக இயங்கிவந்த மோசடி வலையமைப்புக்கள் அனைத்து தகர்த்து எறியப்பெற்றுள்ளன,” என்று; ஒன்றாரியோ மாகாண காவல்துறை அதிகாரி அன்ட்ரூ. கூறினார், பொதுமக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஊடகங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
LJI Journalist Arjune