கோட்டாபயவின் வருகை தொடர்பாக தாய்லாந்து வெளியிட்ட தகவல்.
கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்!
செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Tanee Sangrat தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர கடவுச்சீட்டின் கீழ், கோட்டாபய ராஜபக்சவை 90 நாட்கள் தங்கியிருக்கும் நோக்கில் உள்நுழைய அனுமதிப்பதில் தாய்லாந்திற்கு எந்தப் பிரச்சினையையும் Tanee Sangrat குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ஷ எப்போது வருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிடவில்லை. ( நன்றி : தமிழ்வின் )
( இந்த ஒழுங்குகளை ரணில் அரசாங்கம் செய்வதாக ஒரு செய்தியுமுண்டு.)
பிற்குறிப்பு:
கோட்டபாய தனது பன்னிரண்டு வருடங்களுக்கு மேலான கொடுங்கோல் ஆட்சியில் தமிழரை நாடு நாடாக ஓட ஓட விரட்டினார். இன்று அந்தக்கர்ம வினை அவரையே நாடு நாடாக ஓட ஓட விரட்டுகிறது. தமிழரை அணைக்க பல நாடுகள் முன்வந்தன. ஆனால் கோதாவை ஏற்க உலகில் எந்த நாடும் முன்வரவில்லை. இனிமேலாவது இலங்கை ஆட்சியாளர்கள் புத்த பகவான் கூறிய அறவழியில் நடப்பார்கள் என எதிர்பார்ப்போம். 🙏 🙌
– விக்டர்