வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
ராஜபக்ஷக்களின் வெற்றி நிரந்தர வெற்றியா? ஆல்லது தென்னிலங்கை மக்களின் தோல்வி நிரந்தர தோல்வியா – காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மக்களுடன் இணைந்து இலங்கை அரசியலில் புதிய ஒழுங்கு முறை குறித்து சிந்தித்து செயற்பட்டனர்.இந்த ஒழுங்கு முறை கடந்த 74 வருடங்களாக இலங்கையில் நிலவி வருகின்ற அரசியல் ஒழுங்கு முறையை கேள்விக்குற்படுத்துவதாக அமைந்தது. தென்னிலங்கை இளைஞர் யுவதிகளுடன் இணைந்து மக்களும் கோரி நிற்கின்ற ‘அரசியல் மாற்றம’; குறிப்பாக இன்றைய ஆளுந்தரப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.ஏன் அவர்களது அரசியல் இருப்பையே கேள்விக் குறியாக்கும் மாற்றமாகும். எனவே இந்த மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை பயணிப்பதை இன்றைய ஆளுந்தரப்பு குறிப்பாக ராஜபக்ஷ குடும்பமும் அவர்கள் சார்ந்தவர்களும் அனுமதிக்க போவதில்லை.. அதுவே இன்று தென்னிலங்கை அரசியலில் நடைபெறுகின்றது.
மொத்தத்தில் ராஜபக்ஷக்கள்; வென்றுவிட்டனர். தென்னிலங்கை இளைஞர் யுவதிகளும் மக்களும் தோற்றுப் போய்விட்டனர். ராஜபக்ஷக்களின் வெற்றி நிரந்தர வெற்றியா? ஆல்லது தென்னிலங்கை மக்களின் தோல்வி நிரந்தர தோல்வியா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
தென்னிலங்கை இளைஞர் யுவதிகளும் மக்களும் ‘மக்களின் அமைதி வழி புரட்சி’ மூலம் தாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். அவர்கள் எதிர்பார்த்தது போன்று வெற்றியை நோக்கி நகர்ந்தனர்.
மறுபுறம் மக்கள் தமக்குள் வரித்துக் கொண்ட தமது ‘எதிரி’ அந்த எதிரி நாடாளுமன்றில் கொண்டுள்ள பெரும்பான்மை பலம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் இருந்த அரசியலமைப்பு முறை குறித்து சிந்திக்கத் தவறிவிட்டனர். குறிப்பாக ‘மாற்றத்தை’ விரும்பி நின்ற சக்திகளுடன் கைகோர்த்து நின்ற சட்டத்தரணிகளும் இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். மாற்றுத் திட்டம்பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ;டவசமாக இது நடைபெறவில்லை. மக்கள் எழுச்சிக்குள் அடுத்தடுத்து ‘மாற்றங்கள்’ தானாக நிகழ்ந்துவிடும் என்றே இந்த சக்திகள் அணைத்தும் நினைத்திருந்தன. இதன் விளைவு ராஜபக்ஷக்கள் ரணில்விக்ரமசிங்க தலைமையில் மீள எழுச்சி பெற்றுவிட்னர்.
தென்னிலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தாம் வழங்கிய ஆணையை தாமே மீளப் பெறும்வகையில் ‘மைனா கோ கம’ மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கீழிறக்கிய மக்கள் ‘கா கா கபுடா’ மூலம் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினர். ‘கோதா கோ கம’ மூலம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை நாட்டைவிட்டே வெளியேற்றினர். ராஜபக்ஷ குடும்பத்தை நாடாளுமன்ற பதவிகளுடன் மட்டுப்படுத்தினர்.
இந்த மாற்றங்கள் 74 வருடகால இலங்கை அரசியலில் மாற்றத்துக்கு வித்திட்டுவிடும் என தப்புக்கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் மக்கள் ஆணையால் பிரதமர் ஜனாதிபதி என்ற பதவிகளுக்கப்பால் நாடாளுமன்றில் ராஜபக்ஷக்கள் மக்கள் ஆணைமூலம் கட்டி எழுப்பியிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மறந்துவிட்டனர்.இந்தப் பலத்துடன் அரசியலமைப்பு ஏற்பாடுகள் வழங்கியிருந்த சட்ட ஏற்பாடுகளையும் கணக்கில் எடுக்காது இருந்துவிட்டனர்.
இதன் விளைவு ராஜபக்ஷக்களும் அவர்களுடன் இணைந்த ஆளுந்தரப்பினரும் நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்துடன் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கமைய தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டதுடன் திக்கற்று நின்ற ரணில்விக்ரமசிங்கவை தமது ‘பாதுகாவலனாக’ ‘முன்னரங்கு போராளியாக’ ஆக்கிக் கொண்டனர்.
தமது எஜமானர்களின் மீதான விசுவாசத்தை கருத்தில் எடுத்து ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க போராட்டக்காரர்களை FASCIEST என முத்திரை குத்தியது மாத்திரமன்றி அவர்களை ‘பயங்கரவாதி’களாகவும் ஆக்கி ஹிட்லர் பாணியில் அடக்கவும் தொடங்கினார்.
இதன் விளைவு அவசரகால சட்டத்தின் கீழ் ‘மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள்’ வேட்டையாடப்படுகின்றனர்.
தொடர் கைதுகள் தடுத்து வைப்புகள் நடுநிசியில் தேடுதல் நீதிமன்ற வழக்குகள் என ‘மாற்றத்தை விரும்பியவர்களும்’ அவர்களுக்கு பக்க பலமாக நின்றவர்களும் அவசரகால சட்டத்திற்கு தீனியாகின்றனர்.
– மொத்தத்தில் மாற்றத்தைக் காணவிழைந்த தென்னிலங்கை மக்களும் இளைஞர் யுவதிகளும் பெரும்பாலானவர்களின் இருப்பு வாழ்வு என்பன கேள்விக்குறியாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொலைகள் கடத்தப்படுதல் காணாமல்போதல் என்பன சகட்டுமேனிக்கு நடைபெறுகின்றன. இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பது மர்மமாக இருக்கின்றது. பொரும்பாலான கொலைகள் போதைப் பொருள் கடத்தலுடன் முடுச்சுப் போடப்படுகின்றன.
இதற்கும் அப்பால்
– சூடுபட்டு இறப்பவர்கள் யார் ?
– சடலங்களாக கரையொதுங்கும் மனிதர்கள் யார்ஃ
– வெள்ளை வானில் கடத்தப்படுவோர் எங்குள்ளனர்.?
ஏன தொடர் நிகழ்வுகள் ஏன் நிகழ்கின்றன எவரால் நடத்தப்படுகின்றன என்பதெல்லாம் மர்மமாக உள்ளன.
தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் மக்கள் இணைந்து தென்னிலங்கை அரசியலில் ஊழல் மற்றும் மோசடி அரசியல்வாதிகள் மத்தியில் விதைத்த ‘பய பீதி’ ரணில்விக்ரமசிங்கவின் பிரவேசத்துடன் ‘மேகக்கூட்டம் விலகுவது’ போன்று மெல்ல விலகத் தொடங்கிவிட்டது. தம்மீதான ஊழல் மோசடிகள் மீள எழாது என்ற நம்பிக்கையை ராஜபக்ஷக்களுக்கும் அவர்கள் சார்ந்த அரசியல் நண்பர்களுக்கும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் ஆட்சி வேரூன்றச் செய்துவிட்டது.
இன்று இலங்கை அரசியலில் குறிப்பாக நாடாளுமன்றில் பேசு பொருளாக இருப்பது
1. நாட்டின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பதல்ல.
2. நாட்டை சூறையாடியவர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் பற்றியதல்ல
3. இவ்வாறான விடயங்கள் நடைபெற்றதைக் கண்டறிவதும் இனிமேல் நடைபெறாமலும் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தல்ல
4. தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் முன்வைத்த மாற்றங்கள் குறித்தல்ல மாறாக
5. தென்னிலங்கையில் எரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள்குறித்தும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதா ன மதிப்பீடு அதாவது வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும்இ ஜனாதிபதியின் வாகனத்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதானதாகவும் உள்ளது.
நாட்டுக்கும் மக்களுக்கம் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்க அரசியல்வாதிகள் தமக்கான நட்டங்கள் குறித்து கணக்குவாசித்துக் கொண்டிருக்கின்றனர்.
– 30 வருடப் போரில் தமிழர்களை எதிரிகளாக்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி ஊழலில் மிதந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிக் கொண்டிருந்தபோது தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேசப்பற்றாளர்களாக வீடுதலை வீரர்களாக சிங்கள இனத்தின் இரட்சகர்களாக போற்றப்பட்டனர்.
தேசப்பற்றாளர் விடுதலை வீரர்கள் இரட்சகர்கள் என்பன நாட்டைத் தொடர்ந்தம் கொள்ளையடிக்க மக்கள் வழங்கிய ஆணையாகக் கொண்டு செயற்பட்டபோது மக்களின் வாழ்க்கையில் விழுந்த அடி அவர்களை சிந்திக்க வைத்தது: கிளர்ந்தெழ வைத்தது.
எனவேதான் மக்கள் அரசியல்வாதிகளின் ஊழல்கள்; கொள்ளைகள் குறித்து கேள்வி எழுப்ப ராஜபக்ஷக்களும் அவர்களுடன் உள்ளவர்களும் இன்றும் போர் வெற்றி குறித்து பேசி மக்களை திசைதிருப்பிவிடலாம் என தப்புக் கணக்குப் போடுகின்றனர்.
இன்றைய தோல்வி தென்னிலங்கை மக்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் ஒரு விடயத்தை உணர்த்தி நிற்கின்றது.
அதாவது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாiஷகளை உள்ளடக்கிய ஒரு பொது வேலைத் திட்டத்துடனான மாற்றத்தை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களையும் இணைத்ததான போராட்டமே வெற்றி பெறும்.
அரசியல் கட்சிகள் மக்கள் எழுச்சியில் ஏற்படும் மாற்றத்தில் தமக்கான அரசியல் அறுவடைக்காக காத்திருக்கும் சக்திகள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
ஆகஸ்ட் 9 மக்கள் எழுச்சியை அரசியல் கட்சிகள் கூட்டுத் தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கட்சிகள் ‘மாற்றத்தை விரும்பாத சக்திகளின்’ அதாவது ரணில்விக்ரமசிங்க தலைமையிலான ராஜபக்ஷக்களின் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் பேரம் பேசுதலிலும் பங்குபற்றுதலிலும் மூழ்கிக் கிடக்கின்றன. ஏன் அமைச்சுப் பதவிகளுக்காகவும் பேரங்களும் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மொத்தத்தில் தென்னிலங்கை அரசியலில் ‘பெரும் பிரளயத்திற்கு’ வித்திட்ட ‘கோதா கோ கம’ தொடர்ந்து ‘ரணில் கோ கம’ காலிமுகத் திடல் ஜனாதிபதி செயலக முற்றம் என்பன 124 நாட்களுக்குப் பின் மக்கள் இன்றி வெளியாகக் கிடக்கின்றது. 124 நாட்கள் இங்கு இடம்பெற்ற கோசங்களும் கோரிக்கைகளும் வெற்றிகளும் தோல்விகளும் மக்களுடனும் இளைஞர் யுவதிகளுடனும் இரண்டரக் கலந்து நாடு தழவியரீதியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இன்னொரு விடியலுக்காய்.
vathevaraj@gmail.com