மன்னார் நிருபர்
25-08-2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாய் மார்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மன்னார் நலன்புரி சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரோய் பீரிஸ் மற்றும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தலைமையில் நேற்று புதன்கிழமை (24) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மன்னார்,நானாட்டான், பகுதிகளை சேர்ந்த தாய்மார்களுக்கு தேவையான உப உணவுப் பொருட்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்து உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜ் வினோதன், மன்னார் நலன்புரி சங்கம் லண்டன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் மற்றும் அதன் மாவட்ட உறுப்பினர்கள் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மன்னார் நலன்புரி சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக போசாக்கு வழங்கும் உணவு திட்டத்திற்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.