சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்த பயனுள்ள கருத்தரங்கில் கனடாவிருந்து சென்று உரையாற்றிய நிமால் விநாயகமூர்த்தி
சென்னையில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணி மற்றும் உளவியல் துறை இணைந்து, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கை ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக ஏற்பாடு செய்த நடத்தியது.
கருத்தரங்கை தலைமை விருந்தினர் திரு.சுபவீரபாண்டியன் – சமூக நீதிக் குழுவின் தலைவர் மற்றும் திரு. நிமல் நாயகமூர்த்தி மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர், கனடா, ஆகியோர் துவக்கி வைத்தனர். அவர்களுடன் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் Rev.Bro.Dr. ஸ்டானிஸ்லாஸ், கல்வி இயக்குனர் – டாக்டர் பாத்திமா வசந்த், கல்லூரி முதல்வர் – டாக்டர் உஷா ஜார்ஜ் மற்றும் துணை முதல்வர்கள் டாக்டர் கீதா ரூஃபஸ் மற்றும் டாக்டர் மீனா உடனிருந்தனர்.
திரு.வீரபாண்டியன் அவர்கள் தனது தொடக்க உரையின் போது, அகதிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம், குடியிருப்பு வசதிகள், திறன் மேம்பாடு, இலவசக் கல்வி மற்றும் எரிவாய்வு இணைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு விரிவான திட்டங்களை கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அகதிகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் வளர்ச்சிக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் மாணவர்களைத் ஊக்குவித்தார். திரு.நிமல் விநாயகமூர்த்தி அவர்கள் அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தமிழகம் வழங்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் குறித்து எடுத்துரைத்தார்.
டாக்டர் சுஜாரிதா மாக்டலின், இணைப் பேராசிரியர் & தலைவர், உளவியல் துறை, பிரசிடென்சி கல்லூரி, தலைமையில் குழு விவாதத்துடன் கருத்தரங்கு தொடர்ந்தது. இலங்கைத் தமிழ் அகதிகளின் கலாச்சாரத் திறன் மற்றும் மனநலம் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீதித்துறை பற்றிய விவாதம் நடைபெற்றது.
திரு. கோவி லெனின் ஆலோசனைக் குழு உறுப்பினர், இலங்கைத் தமிழ் அகதிகள் நலக் குழு, தமிழ்நாடு அரசு, சுகாதாரப் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.
திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் மனித உரிமைகள் வழக்கறிஞர் & அரசியல் ஆய்வாளர் அவர்கள் இலங்கை தமிழரின் சட்ட ரீதியான சவால்களை பற்றி விளக்கினார் . இரண்டாவது குழு விவாதத்திற்கு சென்னை கிறித்துவக் கல்லூரியின் சமூகப் பணித் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் பிரின்ஸ் சாலமன் தலைமை வகித்தார். டாக்டர் பாரிவேலன் கே எம், இணைப் பேராசிரியர், தலைவர் – நிலையற்ற தன்மை மற்றும் அகதிகள் ஆய்வு மையம், சட்டம், உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஆளுகை, மனிதநேய சமூக சந்திப்புகள்: கனவு அல்லது உண்மை என்ற தலைப்பில் பேசினார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஆணையத்தின் கள அதிகாரி திரு. சச்சிதானந்த வளன் மைக்கேல் அகதிகளின் உரிமைகள்: யதார்த்தத்திற்கான ஒரு பார்வை என்ற தலைப்பில் பேசினார். குழு விவாதம் அன்றைய தலைப்பில் அதிக புரிதலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அகதிகள் உரிமைகள் பற்றிய யதார்த்தத்தை மாணவர்களை பார்க்க வைத்தது.
தலைமை விருந்தினர் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் சரசாவதி அவர்கள் நிறைவு உரை ஆற்றுகையில், உரிமைகளின் முக்கியத்துவம் மற்றும் இலங்கை அகதிகளின் உரிமைகளுக்காகப் பணியாற்றிய அனுபவந்த்தை பகிர்ந்துகொண்டார். கலந்துகொண்ட அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியுரையுடன் கருத்தரங்கு நிறைவுற்றது.