ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது
இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ‘உலகெங்கும் பேசப்படுகின்ற ஒன்றாகவும் தமிழகத் திரைத்துறையினரின் பார்வை கனடாவை நோக்கி திரும்பும் நிலையை தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும்.’ இவ்வாறு தெரிவித்தார் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்….
கனடா வாழ் திரு செந்தூரன் நடராஜா மற்றும்; அவரது குழுவினர் ஏற்பாடு செய்த ‘ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது…
நூற்றுக்கணக்கான நண்பர்கள். எழுத்தாளர்கள் வர்த்தகப் பிரமுகர்கள். கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற அனைத்துத் தரப்பினரும் கலந்து சிறப்பித்த விழாவில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் கனடிய தேசிய கீதம் ஆகியன இசைக்கப்பெற்றன.
கலை மற்றும் ஊடகத்துறை சினிமா ஆகிய துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு வாழ்த்துரை வழங்கினார்கள். ஊடகத்துறை சார்ந்த சார்பில் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடர்ந்து சில திரைப்படங்களும் அங்கு திரையிடப்பெற்றன.
மொத்தத்தில் இவ்வருட ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா உலகெங்கும் பேசப்படுகின்ற ஒன்றாகவும் தமிழகத் திரைத்துறையினரின் பார்வை கனடாவை நோக்கி திரும்பும் நிலையை தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும்.
சத்தியன்