ரொறன்ரவில் நடன ஆசிரியை ஶ்ரீமதி ராஜநந்தினி லிங்கன் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கும் ‘மதங்கசூளாமணி நாட்டியப் பள்ளி ‘ மாணவிகளும் திரு. திருமதி லிங்கன் தம்பதியின் புதல்விகளுமான பூங்கவி. பூந்தளிர் சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த 03-09-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ஆர்மேனியன் இளைஞர் கழக மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது
அரங்கேற்றத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பொன்னையா விவேகானந்தன் அவர்களும் தாரணி லக்மவாசன் அவர்களும் இணைந்து தொகுத்து வழங்கானர்கள். அரங்கேற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி சுப்பிரமணியம் சுதாகர் அவர்களும் அண்ணாமலை பல்கலைக் கழக பரதநாட்டிய விரிவுரையாளர் சூரியகலா ஜீவநாதன் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் வெங்கடேஸ் நடராஜன் அவர்களும் செல்வி லக்சுமி சிவனேஸ்வரலிங்கமும் பாடல்களை இசைக்க திரு கார்த்திகேயன் ராமநாதன்-மிருதங்கம். முனைவர் தில்லை முத்துக்குமாரன் நடராஜன் அவர்கள் வயலினையும் அஜந்தி மதனாகரன் அவர்கள் புல்லாங்குழலையும் இசைத்து பக்கவாத்தியக் கலைஞர்களாக மேடையில் பிரகாசித்தார்கள்.
பக்கவாத்தியக் கலைஞர்களைப் போலவே அரங்கேற்றச் செல்விகள் இருவரும் மேடையில் தங்கள் உருப்படிகளை நேர்த்தியாக ஆடி சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றார்கள்.
பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் அரங்கேற்றச் செல்விகளின் அன்னையும் குருவுமாகிய ஶ்ரீமதி ராஜநந்தினி லிங்கன் அவர்களின் கற்பித்தல் மற்றும் நடன அமைப்பு போன்றவற்றை விதந்துரைத்து செல்விகளின் அர்ப்பணிப்பான நடனங்களையும் ஒவ்வொரு உருப்படியையும் உற்சாகத்தோடு மேடையில் சமர்ப்பித்ததையும் பாராட்டி உரையாற்றினர்.