(28-09-2022)
ஹற்றன் நஷனல் வங்கியின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய் மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையில், ஹற்றன் நஷனல் வங்கியின் நானாட்டான் முகாமையாளர் கடம்பன் மற்றும் இணை ஊழியர்களின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைத்தார்
மேலும் இந்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச வைத்திய அதிகாரி .ரூபன் லெம்பேட் மற்றும் தாதியர்கள் வங்கி ஊழியர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்