(30-09-2022)
மத்துமகல திவ்ய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் புதுப்பிக்கப்பட்ட பலிபீடம் மற்றும் நற்கருணை மண்டபத்தை ஆசீர்வதிக்கும் வைபவம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, திவ்விய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்கு தந்தை வண.பிதா ரொஷான் சமிந்த , நீர்கொழும்பு லயோலா கல்லூரி வண.பிதா கென்னடி பெரேரா , செத்சரண நிறுவனத்தின் பணிப்பாளர் வண. பிதா லோரன்ஸ் ராமநாயக்க மற்றும் மொரட்டுவை சென்ட் . செபஸ்டியன் கல்லூரி அதிபர் வண. பிதா சஞ்சீவ மெண்டிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.