முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மைய காலமாக காடழிப்பு மற்றும் மண்ணகழ்வுகள் சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற நிலையில் அதனை கட்டுபடுத்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேச போலீசார் தவறி நிற்கும் இதேவேளை மறைமுக அனுமதிகளை வழங்குகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக மாந்தை கிழக்கின் மாபியாக்கள் என மக்களால் சட்டவிரோத செயற்பாடுகளினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர்களை போலீசார் பாதுகாப்பதுடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரும் குடியேற்ற உத்தியோகத்தரும் சட்டவிரோத காடழிப்புக்கு உதவிகளை செய்து வருகின்றனர் என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இதேவேளை குறித்த நபர்களினால் தங்கள் மீது வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மக்கள் மீது இரவு நேரங்களில் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதும் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையம் சென்று முறையிட சென்றால் போலீசார் நடவடிக்கை எடுக்காதுமாக இருக்கின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இதேவேளை குடியேற்ற உத்தியோகத்தரால் கரும்புள்ளியான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அண்மையாக உள்ள அரச காணி(யுத்தத்திற்கு முன்னரும் மீளக்குடியேற்றத்தின் ஆரம்ப காலகட்டத்தின் போதும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 5 பெண் பிள்ளைகளை கொண்ட தாயொருவர் நீண்டகாலமாக அந்த காணியை பயன்படுத்தி வந்தார்,இவரிடமிருந்து பறிக்கப்பட்டு ) தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்கின்றார் என மேற்குறித்த நபர்களுக்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அந்த காணி வழங்கப்பட்டிருக்கின்றது
எந்த வொரு காணி பயன்பாட்டு குழு கூட்டத்திலும் மேற்குரித்த காணிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமலேயே குடியேற்ற உத்தியோகத்தரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இருந்த போதும் கடந்த காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் அனுமதிக்காக கோரப்பட்டிருந்தது
ஆனால் அனுமதி இல்லாமலே அவர்கள் பயிர்செய்கை நடவடிக்கையில் நீண்ட காலமாக செய்கின்றார்கள் எனவும் தெரிவித்த மக்கள் எங்கள் உறுதி காணிகளில் துப்பரவு செய்வதாயின் ஓட்டிவந்து அனுமதி கேட்கும் குடியேற்ற உத்தியோகத்தர் அவர்கள் சட்டவிரோதமாக காடழித்து காணி இடிக்கும் போது அமைதியாக இருப்பதாகவும் பார்வையற்ற ஒருவர் பிரதேச செயலாளராக இருக்கின்றார் எனவும் குடியேற்ற உத்தியோகத்தரே நிர்வாகங்களை நெறிப்படுத்துவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்
இதேவேளை கரும்புள்ளியான் பகுதியில் கழிவாற்றினை மறித்து ஒரு சிலரால் மேகொள்ளப்பட்ட 5 ஏக்கருக்கும் மேற்பட்ட அரச காணி அத்துமீறி பிடிப்பு நடவடிக்கைக்காக கிராம அலுவலாரால் இரு தடவையாக ஒட்டப்பட்டிருந்த வெளியேற்றல் நடவடிக்கை பத்திரம் மேற்குறித்த நபர்களினால் கிழிக்கப்பட்டு அந்த காணிக்குள் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என தெரிவித்தகுறித்த பகுதி கிராம அமைப்புக்கள் கண்பார்வையற்ற பிரதேச செயலாளராகையால் குறித்த சம்பவங்களுக்கு அவர் மௌனம் சாதிப்பதாக தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த பிரதேச மட்ட அமைப்புக்கள் பிரதேச செயலகத்தில் முறையிட்டால் குறிப்பிட்ட நேரத்த்திற்குள் சம்பத்தப்பட்ட நபர்களிடமிருந்து மிரட்டும் தொனியில் தொலைபேசி அழைப்பு வருவதாக தெரிவிக்கின்றனர்