அண்மையில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பெற்ற ‘தியாக தீபம்’ திலீபன் அவர்களின் நினைவு தினம் உலகின் மூலை முடுக்கெல்லாம் நினைவு கூரப்பட்டது.
அதனை முன்னிட்டு கனடாவில் இயங்கிவரும் உணவு வங்கி ஒன்றுக்கு உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வழங்கிட தீர்மானித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய அங்கத்தவர்கள் சிலர் இந்த முயற்சியில் தீவிரமாக இயங்கினர்.
குறிப்பாக கனடாவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் சிலரான திருவாளர்கள் நிமால் விநாயகமூர்த்தி. மரியாம்பிள்ளை மரியராசா மற்றும் நவனேசன் ஆகியோர் உணவு வங்கியின் பிரதிநிதியிடம் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சேகரிக்கப்பெற்ற உலர் உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் கையளிப்பதைக் காணலாம்.
(படங்கள்;_ சத்தியன்)