கடந்த செப்படம் மாதம் 23ம் திகதி நடைபெற்ற திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் ‘சந்தியாராகம்’ குழுவினர் நடத்திய இசைப்போட்டி ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சந்தியா ராகம்- 4 என்னும் தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்து போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். அவர்களின் இறுதிப் போட்டியின் போது முதல் 3 இடங்களை பின்வரும் பாடகர்கள் தட்டிக் கொண்டார்கள்..
1ம் இடம் திரு பொபி விஜேய் . 2ம் இடம் திரு சுந்தரம் செல்வரட்ணம் மற்றும் 3ம் இடம். திரு கதிர்காமநாதன் ஆறுமுகம் என Singers from Tamil Senior Citizens மூவர் கேடயங்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் ஆகியவற்றை பரிசுப் பொருட்களாகக் பெற்றுக் கொண்டார்கள்.