(13.10.2022)
மன்னார் நிருபர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மூலம் எதிர் கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிபாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையின் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மன்னார் முருங்கன் டொன்பொஸ்கோ கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இளைஞர்,யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி, பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான தொழில்வாண்மையை வளர்பதற்கான பயிற்சி, போதை பொருளுக்கு அடிமையாகாது மகிழ்சியான குடும்ப சூழலை கட்டியெழுப்புவதற்கான பயிற்சி என பல தரப்பட்ட நடைமுறை பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த செயற்திட்டத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பயிற்சிக்கு வளவாளராக திரு.பிரேம் அவர்கள் கலந்து கொண்டதுடன் மெசிடோ நிறுவன உத்தியோகஸ்தர்களும் பயிற்சியில் பங்கு பற்றியமை குறிப்பிடதக்கது