கனடா உதயன் சர்வதேச விருது விழா-2022 வெற்றிகரமாக நடைபெற்று அனைவரையும் கவர்ந்தாக விளங்கியது
கடந்த 15-10-2022 சனிக்கிழமையன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் ஒன்பது வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றும் சிறப்பான உரைகள் சபையோரைக் கவர்ந்தும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்த நடனங்கள் பாடல்கள் மற்றும் வீனா கானம் இசை நிகழ்ச்சிகள் சபையோரால் பாராட்டுக்கள் பெற்றும் சுவையான இராப்போசன விருந்தோடு நிறைவுற்றும் கொண்டாடப்பெற்றமை இன்று வரை ரொறன்ரோ மாநகரில் மாத்திரமன்றி. தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பேசப்பெறும் பெருவிழாவாக திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது.
கடந்த 15ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் அமைந்துள்ள கென்னடி கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் தலைவர் மதத் தலைவர்கள் வர்த்தகப் பெருமக்கள் மற்றும் கலை இலக்கிய நண்பர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வழங்கப்பெற்ற ஒன்பது விருதுகளைப் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு;
- உதயன் தலைமைத்துவ விருது; பாஸ்டர் எஸ். ஜெயானந்தசோதி அவர்கள்
- உதயன் கலை இலக்கிய மேன்மை விருது: ‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன் அவர்கள்
- உதயன் வர்த்தக வெற்றியாளர் விருது (ஓன்றாரியோ); கிருஸ்ணகோபால் செல்லத்துரை அவர்கள்
- உதயன் வர்த்தக வெற்றியாளர் விருது (கியுபெக்): குமரேசன் முத்துக்கிருஸ்ணன் அவர்கள்
- உதயன் இளையோருக்கான அடையாள விருது; மெலனி சுரேஸ்குமார் அவர்கள்
- உதயன் பல்லின உறவுகளுக்கான மேன்மை விருது: மரியா சாரஸ் அவர்கள்
- உதயன் வாழ் நாள் சாதனையாளர் விருது (தமிழ்நாடு); பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் அவர்கள்
- உதயன் வாழ் நாள் சாதனையாளர் விருது (இலங்கை); சிவஶ்ரீ சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்) அவர்கள்
- உதயன் சிறப்பு விருது (இலங்கை); நிரோஸ் தியாகராஜா அவர்கள்
பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் விருது பெற்றவர்களுமாக 500 இற்கும் அதிகமானர்கள் கலந்து கொண்ட இந்த அற்புதமான விழா அனைவரையும் பரவசப்படுத்தியது என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சிகள் வர்த்தகப் பிரமுகர் திரு கென் கிருபா அழகாக தொகுத்து வழங்கினார். இறுதியாக இடம்பெற்ற வீணா கானத்தை மொன்றியால் அறிவிப்பாளர் அர்ஜஶன் தொகுத்து வழங்கினார்.