யாழ். வறுத்தலை விளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 01 மானவர்களுக்கான திறன் வகுப்பறைத் திறப்பு விழா, கடந்த 05ஆம் திகதி புதன் கிழகம் பாடசாலை அதிபர் திலக தீபன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி திறன் வகுப்பறைக்கான பொருட்கள் இரத்தினம் அறக்கட்டளையின் நிறுவுனர் மருத்துவர் நித்தியானத்தன் மருத்துவர் ஜெயரதன், மருத்துவர் தயாபரன், மற்றும், மனோகரனின் அனுசரணையுடன் அன்பளிப்பு செய்யப்பட்டன. நிகழ்வில் பிரதம விருத்தினராக முனைவர் ஜெயராஜனும், சிறப்பு விருந்தினராக, சிவசிறி திருவருட்செல்வனும் கலந்து சிறப்பித்ததுடன், இதயராஜா குருக்களின் ஆசியுடன், திறன் வகுப்பறைக்கான பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர் ஜெயராஜன் தனது உரையில், மேற்படி பாடசாலையானது மீள் குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு, துரிதமாக முன்னேற்றமடைந்து வருவதாகவும். இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவார்களெனத் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
திறன் பங்கை எனும் நவீன கற்பித்தற் சாதனமானது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரதாசமாக அமைத்திருப்பதாகவும். இதனை பாடசாலைக்கு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்கள் திறன் பலகையில் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.