மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-குறித்த சம்பவம் (18) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில், குறித்த வயோதிபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து பஸ் சாரதியும் நடத்துனரும் விபத்தின் பின்னர் அவ்விடத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண் பட்டதால், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அதன் பின்னர் குறித்த பஸ் சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மன்னார் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.