சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் ‘முளை’ விடத் தொடங்கிய காலம். அப்போது தமிழர் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் அவ்வாறான அமைப்பாளர்களையும் அவர்களின் பின்னால் திரியும் தொண்டர்களையும் தாக்கத் தொடங்கினார்கள்.
அதனை அறிந்த தளபதி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் இளைஞர் பேரவையைச் சோர்ந்த இளைஞர்களிடம் அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்றும் அந்த அமைப்பாளர்களை உங்கள் ஊரில் அல்லது இல்லங்களில் நடைபெறும் நல்ல கெட்ட காரியங்களுக்கு அழைக்காதீர்கள். அப்போது அவர்கள் தங்களை தமிழர் சமூகும் ஒதுக்குகின்றது என்பதை உணர்ந்து கொள்வார்கள் ஏன்று உணர்ந்த கொள்வார்கள்’ ஏன்றார்.
அவ்வாறான சிந்தனையைக் கடைப்பிடிக்கின்றாரா ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா ? என்று கேட்கும் அளவிற்கு அண்மைக்கால சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா அவர்களின் மறைந்த துணைவியார் அவர்களின் நினைவு தின வைபவத்திலும் சுமந்திரனைக் காணவில்லை. இது போன்று சுமந்திரன் தொடர்பான அரசியல் விமர்சனங்களை மிகவும் காட்டமாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா அவர்கள் வைத்து வருகின்றார்கள் என்பதையும் கட்சி உறுப்பினர்கள் நன்கு அவதானித்து வருகின்றார்கள்
இதே வேளை ”இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என்ற சிறீதரன் சிவஞானம் எம்பி அவர்களின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (20.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.
கட்சி என்று கூறும் போது கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும்.
தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அது மத்திய குழுவில் உள்ள நாடாளுமன்ற குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு முடிவும் ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன்.எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் கட்சி நிலைத்து நிற்கும்.
இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
உயர் நீதி அரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால், பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது.
இதற்கமைய தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக ‘சுத்துமாத்து’ சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சிக்குள்ளும் ‘செல்வாக்கு’ குறைந்து வருவதாக அவதானிக்கப்படுவதாக செய்தியாளர் அறிவித்துள்ளார். எனினும் சிறீதரன் சிவஞானம் எம்பஏஏ அவர்களின் கருத்தை முற்றாக நாம் நம்ப முடியாது என்றும் அவர் சுமந்திரன் பக்கம் இருந்து ஏதாவது சலுகைகள் மற்றும் ரணில் பக்கம் இருந்து கிடைக்கு ‘இலட்சக் கணக்கான’ சன்மானங்கள் எதுவும் கிடைத்தால் அதற்கும் மயங்கக் கூடியுவர் ” என்றும் செய்தியாளர் எழுதியுள்ளார்.