வேலணை ஆத்திசூடி வீதியை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து, அமரத்துவமான திருமதி. துரைராஜா பராசக்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறும் தினம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
சமர்ப்பணம்
முன்னைய தவத்தின் பேறாய்
முகிழ்ந்ததோர் அன்புமிகுந்த அன்னையே
பின்னையெம் வாழ்வுப் பூங்கா
சிறப்பு வைத்த அன்பே
தந்தையை இழந்து நாம் தவித்திட
உன்னையே தந்து உயிராய்
உவப்பொடு எம் பணி செய்தாயே
என்னேயுன் பெருமை என்று
எல்லோரும் வியந்து போன்ற
மண்ணிலே மதிப்பு பொங்க
மக்களை உயர்த்தி வாழ்ந்தாய்
எண்ணிய எண்ணமெல்லாம்
இதழ்கமழ் மலராய் தொடுத்து
கண்ணிலே ஒற்றிப் போற்றிக்
உன் கழலடி வைத்தோம் அம்மா
அம்மா உன் புண்ணியச் செயல்கள்
விண்ணிலே சேர்ப்பதாக
“தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
குடும்பத்தினர்