கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான
அமரர் சத்தியசீலன் செல்லத்துரை
அவர்களின் 15ம் ஆண்டு நினைவாஞ்சலி.
(முன்னாள் முறைமுக அதிகாரசபை ஊழியர், கொழும்பு)
பதினைந்து ஆண்டு காலம் எப்படியோ ஓடியது
எதுவும் பேசாமல் எமைவிட்டுப் பிரிந்து
காலனோடு கைகோர்த்துச் சென்றீர்கள்
கலங்கிய இதயங்களை எமக்கு தந்துவிட்டு..
என்றும் நீங்கள் எம்மோடு வாழ்வீர்கள் என்று
எப்போதும் எண்ணியிருந்தோம் இறுதியில் ஏமாந்தோம்
நீங்கள் மறைந்ததனால் நாங்கள் கருகிய புற்களானோம்
கலங்கிய நீரோடையானோம். இயங்காத இயந்திரமானோம்
இலைகள் உதிர்ந்த மரங்கள் ஆனோம்
எமக்காய் வாழ்ந்தவரே உம் வாழ்வைத் தொலைத்தீரோ
எத்தனையோ ஆசைகளை இடையில் துறந்தவர் நீர்
அர்ப்பணிப்பு என்பதற்கு அடையாளம் நீங்கள் தான்
அன்பரே உங்கள் அன்பு எமக்குத் தேவை
அருகில் இருத்தலும் எமக்கும் ஆறுதலைத் தரும்
நம்பியிருந்தோம் அது நிறைவேறவில்லை
நற்றாற்றில் கவிழ்ந்த படகு போல் எங்கள்
இதயங்கள் துன்பத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து வெடிக்கின்றன.
என்றென்றும் நெகிழ வைக்கும் நின் பணி
தலைமுறைக்கும் தொடரட்டும்.
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்கைள், பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்