மன்னார் நிருபர்
29.11.2022
மன்னார் அரச பேருந்து சாரதிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(29) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் அரச போக்குவரத்து பேருந்து சாரதி ஒருவரை தனியார் பேரூந்து சாரதி கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் குறித்த சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும் தாக்குதலை மேற்கொண்ட சாரதிக்கு உடனடியாக பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் வடமாகாணம் முழுவதும் அரச போக்குவரத்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்திற்கு காரணமானவர் சட்டத்தின் மூலம் உரிய விதமாக தண்டிக்கக் கோரியும் அரச போக்குவரத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் அரச போக்குவரத்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.