-புலம் பெயர்ந்த உறவுகளுக்கு எச்சரிக்கை.
(12-12-2022)
மன்னாரில் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை தவிக்க விட்டு வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் இளம் குடும்பப் பெண் தொடர்பாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளது.
-குறித்த பெண்ணின் வலையில் வெளிநாடுகளில் உள்ள சில ஆண்களும் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
மன்னாரைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் தனது 11 வயது பெண் மற்றும் 5 வயது ஆண் பிள்ளை ஆகிய இரு பிள்ளைகளையும்,கணவரையும் தவிக்க விட்டு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாது அவர்களை விட்டு வெளியில் சென்று வெளிநாடுகளில் உள்ள சில ஆண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சமூகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
-தற்போது குறித்த பெண் மன்னாரில் தனியாக வாழ்ந்து வருவதோடு,கணவன் மற்றும் இரு பிள்ளைகள் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாது சுயநலத்துடன் செயல்படுவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் குறித்த பெண் தொடர்பாகவும்,அவரது செயல்பாடுகள் குறித்தும் பல விடையங்கள் வெளியாகி உள்ள போதும்,குறித்த பெண் தேவையற்ற தொடர்புகளை துண்டித்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் இவ்வாறான பெண்கள் குறித்து புலம்பெயர்ந்த உறவுகள் அக்கரையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.