கனடா-காரை கலாசார மன்றம் வழங்கி வருகின்ற காரை வசந்தம் கலை விழாவானது இம்முறை 21வது ஆண்டாக சென்ற 10-12-2022 சனிக்கிழமை தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது.
அன்றைய தினம் கடும் குளிர் நிலிவியபோதிலும் காரைநகர் மக்களின் வருகையினால் அரங்கம் நிரம்பி வழிந்தது. கலை மாணவர்களதும் மூத்த கலைஞர்களினதும் பல்சுவைக் கலை நிகழ்வுகள் சபையோரைக் கவர்ந்து பாராட்டைப்பெற்றிருந்தன. மன்றத்தின் தலைவரான திரு.சிவசம்பு
சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக காரை மண் தந்த கலைஞரான “ஒருத்தி” திரைப்படத்தை இயக்கி சாதனை படைத்த P. S.சுதாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.