கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கபடுவர் சச்சின். கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த சச்சின் சதத்தில் சதம் கண்டவர். கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற போதும் இப்போதும் அவருக்கு ரசிகர்கள் குறைந்தபாடில்லை. தற்போது கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களும் சச்சின் போன்று வர வேண்டும் என்பதே என் கனவு என்பார்கள்.
அப்படிப்பட்ட கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் காட்டி வருகிறார். 23 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்.
தற்போது நடப்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி தொடரில் கோவா அணிக்காக அர்ஜூன் விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அர்ஜூன் சதம் விளாசி அசத்தி உள்ளார். அவர் பேட்டிங் செய்ய வந்த போது கோவா அணி 201 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சுயாஷ் பிரபுதேசாய் உடன் இணைந்து 209 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
1988-ல் சச்சின் தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசி இருந்தார். இப்போது 2022-ல் அவரது மகன் அர்ஜுனும் முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தந்தையை போலவே கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை எட்டி பிடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.