வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் திரு.S.தவமோகன் அவர்களும், UK- இரட்ணம் பவுண்டேசனும் இணைந்த நிதிப்பங்களிப்பில் எமது பாடசாலைக்கு வழங்கிய திறன் வகுப்பறை ஒன்று இன்று (22.12.20022) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக எமது பிரிவின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வே.கிருபானந்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக தவமோகன் அவர்களின் தாயார் திருமதி மல்லிகாதேவி சிவசுப்பிரமணியம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் (ICT) திரு.சி.சிவராஜா அவர்களும், திருமதி.றோ.யூட் நேசராஜா அவர்களும்
கலந்து சிறப்பித்தனர்.
இந்த “Smart Board ” ஆனது தற்கால கற்பித்தலுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய கல்விச் சீர்திருத்த கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் மிகப் பயனுள்ள ஒன்றாகும். திறன் வகுப்பறைக் கற்பித்தலானது மாணவர்கள் விரும்பிக் கற்கும் வகுப்பறையாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் இதனைத் தந்துதவிய, தவமோகன் அவர்களுக்கும், இரட்ணம் பவுண்டேசன்-UK ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்களுக்கும் நன்றி கூறுவதுடன், இரட்ணம் பவுண்டேசன் ஆற்றிவரும் மனித நேய அர்ப்பணிப்பான சேவைகளுக்கு பாடசாலைச் சமூகம் சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.