கனடா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது 1 முதல் 10 வகுப்பு வரை கற்கும் மாணவரின் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன்களை மேம்படுத்த கணிதம் மற்றும் பொது அறிவு போட்டிகளை ரொறொன்ரோ(GTA), ஒட்டாவா(Ottawa), மொன்றியல் (Montreal), கோன்வால் (Cornwall) ஆகிய பிரதேசங்களில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு, இப்போட்டிகளை நிகழ்நிலை (online) வடிவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போட்டிக்கான பதிவுகளை 2023 தைமாதம் 02 ஆம் திகதி முதல் நிகழ்நிலை (online) மூலம் செய்யமுடியும். பதிவுசெய்யும் மாணவர்களிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் முந்நூறு பேர் மட்டும் 2023 தைமாதம் 09 – 15 வரை இலவச பயிற்சி தேர்வுக்கு தோற்றமுடியும். இறுதித் தேர்வு 22.01.2023 அன்று நடைபெறும்.
மேலதிக தகவலுக்கு
www.mahajana.ca என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது 647-417-4447 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்
அல்லது mahajanan.contest@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும்.
பழைய மாணவர் சங்கம் – கனடா.