கனடிய தமிழர் பேரவையின் ஆதரவுடன் தமிழர் மரபுரிமை மாதத்தையும் தைப்பொங்கல் விழாவையும் கொண்டாடிய கனடாவின் வோன் நகர சபை
கனடிய தமிழர் பேரவையின் ஆதரவுடன் தமிழர் மரபுரிமை மாதத்தையும் தைப்பொங்கல் விழாவையும் கொண்டாடிய கனடாவின் வோன் நகர சபை கடந்த திங்கட்கிழமை இந்த பெருவிழாவிற்காக தனது நகரசபையின் வளாகத்தை ஒதுக்கித் தந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கலந்து கொண்டனர்.
கனடாவில் உள்ள நூற்றுக்கணக்கான மாநகர சபைகள் மற்றும் சில மாகாண சபைகள் இந்த இரண்டு விழாக்களையும் ஒவ்வொரு தை மாதத்திலும் கொண்டாடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் City of Vaughan நகர சபையின் மேயர் Steven Del Duca அவர்கள் தலைமையில் இந்த விழாக்கள் நடைபெற்றன.
விழாவில் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் கல்விச்சபை உறுப்பினர் நீதன் சாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கனடிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் சிவன் இளங்கோ அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புக்கள் மற்றும் அதன் தொன்மை ஆகியவை தொடர்பாக சிறப்புரையாற்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த அவரது உரை வேற்றின மக்களையம் கவரும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.