வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
உங்களின் தலைவிதியை மாற்றிக் கொள்வது உங்களின் கைகளில்தான் உள்ளது. எனவே நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாதவரை கடவுள் உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கமாட்டார்.
எனவே மக்களும் மாறிவிட்டார்கள் என்பதை காட்ட வேண்டும். ‘உன்னை நீ மாற்றிக் கொள்ளும் வரை கடவுள் உன் விதியை மாற்ற மாட்டார்‘ என்பதை வரலாறு உணாத்தியுள்ளது.
எனவேஇ தத்தமது சொந்த தலைவிதியை மாத்திரமல்ல நாட்டின் தலைவிதியையே மாற்றும் போது பொறுப்பின் பெரும்பகுதி மக்களிடம் உள்ளது. நடந்ததையும், நடப்பதையும் நன்கு அறியாமல், வரும் தேர்தல்களில் துணிச்சலான, விவேகமான முடிவுகளை எடுக்கத் தவறினால், தங்கள் குழந்தைகளின் எதிர்கால அழிவுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தற்காக மாத்திரமல்ல ஜனநாயகம் செத்துப்போன நாட்டை எதிர்காலச் சந்ததியினருக்க வழங்கியதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும்.
- மக்களின் தீர்மானமிக்க தீர்ப்பின் மையப் புள்ளி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்
இதுதான் தென்னிலங்கையில் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய சுலோகமாகக் இன்று காணப்படுகின்றது. மக்களின் தீர்மானமிக்க தீர்ப்பின் மையப் புள்ளியாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலே முன்நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தேர்தல் நடைபெறுமா என்பதுதான் இன்று மக்கள் முன் உள்ள கேள்வியாகும். ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்காது என ரணில் – ராஜபக்ஷ ஆளும் கட்சி கூட்டாளிகள் பரப்புரை செய்து வருகின்றனர். வெளிப்படையாகவே உள்ளூராட்சி சபைகளுக்கான தோதலை நடத்துவதால் மாற்றம்; ஏற்படப்போவதில்லை என தொடர்சிசியாக கூறி வருவதுடன்; தேர்தலை நடாத்தாமல் விடுதற்கான அணைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
– தேர்தல் செலவுக்கென 10 பில்லியன் ரூபாய் பணம் 2023 வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை திறைசெரி செலுத்தும்நிலையில் இல்லை என்று ஆளும் தரப்பில் தொடர்ச்சியாக கூறப்படுகின்றது.
– தேர்தல் நடத்தினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாது.
– அரசாங்கங்களில் அரச சேவை விரிவடைந்து வருவதால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அரச வருவாயில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கிறது. 1.7 மில்லியன் அரசு ஊழியர்களில் ஒரு பாதியை மட்டுமே கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அரசதரப்பு
– ஏன் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு தீர்வு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை? பொதுத்துறை குறைக்கப்பட்டால், நிறைய நிதி சேமிக்க முடியும். மேலும் பணச் சிக்கல்கள் கணிசமான அளவில் குறைக்கப்படும். அந்த முடிவை அடைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறுகிறது. ஆனால் அவை போதுமானதாக இல்லை என்று ஆங்கில ஊடகம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமாத்திரமல்ல
- இலங்கை தனது பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் ஒரு பெரியஆதாயமற்றஅமைச்சரவையை பராமரிக்கிறது.
- மேலும் சில அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது;
- குற்றவாளிகள் யார் என்று தெரிந்தாலும் பல்வேறு மோசடிகளால் அரசு கஜானாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட எதுவும் செய்யவில்லை.
- 1000 கோடி ரூபா நட்டத்தை மீட்பதன் மூலம் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிப்பதற்கு ஏன் அதிக முயற்சியில் இறங்கவில்லை.
- 55 பில்லியன் சர்க்கரை வரி மோசடியால் ஏற்பட்டதா?
- சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது,அரச வங்கியொன்றில் இருந்து பெறப்பட்ட ஐந்து பில்லியன் ரூபா கடனைத்திருப்பிச்செலுத்தவில்லை என அப்போதைய அமைச்சர் தயா கமகே மீது குற்றம் சுமத்தினார். இந்தத் தொகை திரும்பப் பெறப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலுக்குப் போதுமான நிதி கிடைக்கும்.
7.உள்ளாட்சி தேர்தலுக்கு சுமார் ரூ. 6 பில்லியன். இது நிறைய பணம் என்பதில் சந்தேகமில்லை.
8.ஆனால் தேர்தல்கள் எப்போதுமே விலை மதிக்க முடியாதது. என்றாலும் அத்தியாவசியமானது.
9.தற்போதைய பொருளாதார நெருக்கடி முடியும் வரை காத்திருந்து தேர்தலை நடத்தினால், இன்னும் சில ஆண்டுகளுக்கு மக்களுக்கு தமது வாக்குரிமையை பயன்படுத்த முடியாது போய்விடும்.
10.தற்போதைய நெருக்கடிக்கு காரணமானவர்கள் நாட்டை நாசமாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
11.மற்றும் பொருளாதார மீட்சி சாத்தியமற்றது.
12.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தோல்வியுற்ற தலைவர்கள் பொதுக் கருத்து மற்றும்தேசநலன்பற்றிய மக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் அவர்கள் விரும்பியதைச் செய்ய சுதந்திரமாக இருப்பார்கள் என்றும் அந்த ஆசிரியர் தலையங்கம் குறிப்பிடுகின்றது.
13.நிதி நெருக்கடி குறித்து பேசும் அரசாங்கம் இதற்கும் அப்பால் 275 மில்லியன் ரூபா செலவு செய்து சுதந்திர தின நிகழ்வுகளை நடத்த தயாராக உள்ளது.
- ரணில் – ராஜபக்ஷ ஆளும் கூட்டணி அரசாங்கத்தை மாற்றாது.
உண்மையில் இந்தத் தேர்தல் தற்போதைய நெருக்கடி நிலையைத் தோற்றுவித்ததற்குப் பொறுப்பான இன்றைய ரணில் – ராஜபக்ஷ ஆளும் கூட்டணி அரசாங்கத்தை மாற்றாது.
- ஆனால் இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், நிச்சயமாக தற்போதைய அரசாங்கத்தின் மீதான வாக்கெடுப்பாக, மக்கள் கருத்துக் கணிப்பாக இருக்கும்.
- மேலும் இந்த நாட்டு மக்களின் திறனையும், அவர்கள் தங்கள் பிரச்சினையை எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டும்.
- இது அரசியல்வாதிகளுக்கு ஒரு வலுவான செய்தியைஅனுப்பக்கூடும்.
- இது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்களுக்கு ஒரு பெரிய அழுத்தமாக இருக்கும்.
- ரணில் – ராஜபக்ஷ ஆளும் அணியினர் தெடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நாட்டுக்கும் உலகத்திற்கும் உரத்துச் சொல்வதாக இந்த மக்களின் தீர்ப்பு அமையும்.
- இது எதிர்காலத்தில் தேசிய அளவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்களுக்கு ஒரு முன்னோட்டமாக மக்களின் ஆணைக்கு இழுத்தச் செல்வதாகவும் அமையும்.
- தமிழ்த் தலைமைத்துவங்களின் போக்கு
தென்னிலங்கையின் பிரகடனத்துக்கு மத்தியில் தமிழ்த் தலைமைத்துவங்களில் இணக்க அரசியல் நடத்துபவர்கள் ரணில் – ராஜபக்ஷ அணியினரின் தேர்தல் தேவையில்லை என்ற மொழியையே பேசுகின்றனர்.
மறு பகுதியினர் பிரிந்து நின்று கூட்டமைப்பின் தலைவர் யார் என பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
‘உன்னை நீ மாற்றிக் கொள்ளும் வரை கடவுள் உன் விதியை மாற்ற மாட்டார்‘ என்பதை வரலாறு உணாத்தியுள்ளது என்ற சுலோகம் தென்னிலங்கைக்கு மாத்திரமல்ல வடக்குக் கிழக்கிற்கும் மலையகத்திற்கும் பொருந்தும்.
- கூட்டமைப்பின் தலைவர் மகுடத்தை யாருக்கு சூட்டுவது?
தென்னிலங்கை 75 வருடங்களாக தாம் மேற் கொண்டுவந்த தவறினை திருத்தி அமைக்க புறப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு மக்களைப் பொறுத்து கூட்டமைப்பின் தலைவர் மகுடத்தை யாருக்கு சூட்டுவது என்பதல்ல முதற் பணி. தமது தலைவிதியை தாமே மாற்றி அமைக்கப் புறப்பட்டாக வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை . மலையக மக்களைப் பொறுத்து சொந்தங்களுக்குள்ளும் சுயநலன்களுக்குள்ளும் கிளைவிட்டு பரவியுள்ள தொழிற்சங்க அரசியலுக்கப்பால் பாதை வெட்டிப் பயணம் போயாக வேண்டும்.