கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கவிஞர் கழகம் நடத்திய ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா 28-01-2023 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள FRONTLINE COMMUNITY CENTRE மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கவிஞர் அருட்கவி ஞானகணேசன் விழாவிற்கு தலைமை வகித்தார்.
கவிஞர் கழகத்தின் பொருளாளர் கவிஞர் குமரகுரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து மாவிலி மைந்தன் சண்முகராஜா . கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் கவிஞர் அகணி சுரேஷ் மற்றும் சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இவர்களின் உரைகளில் தமிழர்களின் கலை இலக்கியம் பண்பாடு தொடர்பான சாதனைகள் மற்றும் தமிழ் மொழியின் தொன்மை அதற்குள் அடங்கியிருந்த விலைமதிப்பற்ற அறிவியல் பொக்கிஷங்கள் ஆகியவை தொடர்பாக விடயங்கள் அடங்கியிருந்தன.
தொடர்ந்து கவிஞர் கழகத்தின் செயலாளர் கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது.
மேற்படி கவியரங்கத்தில் கவிஞர் கழகத்தின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.