திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர், 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடத்தை பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தீபா கர்மாகருக்கு ஊக்கமருந்து விவகாரத்தில் 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உறுதி செய்துள்ளது . வரும் ஜூலை 10-ம் வரை இந்த தடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபா கர்மாகருக்கு 2016ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.