கொழும்புத் தமிழ் சங்க பேரவை உறுப்பினர் சட்ட முதுமாணி . ஜெகநாதன் தற்பரன் அவர்கள் சட்டத்தில் தனது கலாநிதி பட்டத்தினை அண்மையில் பெற்றுக்கொண்டார். தற்பரன் அவர்கள் ஒரு வழக்கறிஞர், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்ட முதுமாணி கற்கையினை முடித்து, ஆயுத மோதல்களில் பாதிப்புற்ற சிறுவர்களின் பாதுகாப்பில் அரசுகளின் பொறுப்புடைமை குறித்து ஆய்வு செய்து முனைவர் விருதினை பெற்றுள்ளார்.
சட்டக் கல்லூரி உட்பட்ட பல்வேறு நிறுவனங்களில் விரிவுரையாளராகவும், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலிருந்து சிறுவர் பாதிப்பு அடைவதனைத் தடுக்கும் சர்வதேச சங்கத்தின் மேதகு உறுப்பினராகவும் செயற்பட்டு வரும் இவர், தெற்காசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது அனுபவங்களையும் ஆய்வு செய்து தனது எடுகோள்களினை ஆய்வு செய்து அனுபவ வழி நின்று சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நிரூபித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம், மனிதாபிமானச் சட்டம், பாதுகாப்பு என பல தளங்களில் பல ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் அவர் சிறுவர்களுக்கான சமூக நீதி பெற்றுக் கொள்வதற்கான ஆசிய வழக்கறிஞர்களின் நிறுவனர் ஆவார்.
அத்துடன், சர்வதேச சட்டங்களில் பொறுப்புக்கூறலுக்கு ஏற்ப கடந்த இருபத்தி ஐந்து வருட காலமாக ஒரு சிறந்த பணியைச் செய்தமைக்காக அவரது சேவைகளுக்கான அங்கீகாரமாக அவருக்கு சிறப்பு கலாநிதி பட்டம் ஜப்பான் நாட்டில் தலைமை அலுவலகத்தினை கொண்டு இயங்கும் உலக அமைதிக்கான சர்வதேச பல்கலைக்கழகம் இந்தியாவில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வழங்கி கௌரவித்திருந்தன.
கனடா உதயன் ஆசிரிய பீடம் கொழும்புத் தமிழ் சங்க பேரவை உறுப்பினரும் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம்பெற்றவருமான . ஜெகநாதன் தற்பரன் அவர்களை வாழ்த்துகின்றது