ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (16.02.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் தேவராசா ஹென்ஸ்மன் ,மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு ஜசிந்தன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இ.இராஜசூரி முதலானோருடன் உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
