எதிராளி முக தமிழ் – கணபதிப்பிள்ளை யோகநாதன் என்பவர் 1 இலட்சத்து 23 ஆயிரம் டாலர்கள் நஸ்ட ஈடு வழங்க நீதி மன்றம் உத்தரவு
கனடாவில் இவ்வாறு அவதூறுச் செய்திகளைப் பரப்பும் சமூகஊடகங்களை நடத்தும் மேலும் சிலருக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன
கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அஜித் சபாரத்தினம் அவர்கள் மீதான அவதூறுச் செய்திகள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை தனது சமூக ஊடகங்களினூடாக பரப்பியவர் என்றவகையில் எதிராளி முக தமிழ்- கணபதிப்பிள்ளை யோகநாதன் என்பவருக்கு எதிராக அஜித் சபாரத்தினம் அவர்கள் தொடுத்த வழக்கில் சில வருடங்களாக அந்த வழக்கை விசாரித்தஒன்ராறியோ உயர் நீதி மன்றம் இரு வேறு திகதிகளில் கூடி அஜித் சபாரத்தினத்திற்கு நட்ட ஈடாக மொத்தத் தொகையாக 123 ,000 (123 K) பின்வரும் அடிப்படையில் கணபதிப்பிள்ளை யோகநாதன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது .
மேற்படி வழக்குகள் சார்பாக 2022 August 18 அன்றைய திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் பாதிக்கப்பட்ட அஜித் சபாரத்தினம் அவர்களுக்கு பொது நட்ட ஈடாக $75,000 மற்றும் தண்டனையாகவும் ,அதேபோன்று ஒரு படிப்பினையாக மற்றவர்கள் இவ்வாறான செயல்களைச் செய்வதனைத் தடுக்கும் முகமாகவும் விதிக்கப்பட்ட தண்டப்பணம்$ 25,000 .உட்பட மேலும் . 2022 November 22 அன்றைய திகதியன்று வழங்கப்பெற்ற தீர்ப்பின்பிரகாரம் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான அஜித் சபாரத்தினம் அவர்களுக்கு முக தமிழ்- கணபதிப்பிள்ளை யோகநாதன் (,MK Tamil ,2137534 Ontario Corp ம் , PARAII Media Group m ,PARAII.Com ) தொடர்ச்சியான நட்ட ஈடாக $23,000 வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவை யாவும் 30 நாடகளுக்குள் கொடுக்கப்படவேண்டும் என்றும் உயர் நீதி மன்ற நீதிபதியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நிபந்தனைகளையும் உத்தரவுகளையும் பார்க்க கீழே தரப்பட்டுள்ள நீதிமன்றக் கோவை இலக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் .
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதை கேள்வியுற்ற சில அன்பர்கள் இவ்வாறாக தொடர்ச்சியாக அவதூறுச் செய்திகளை பரப்பும் மற்றவர்களுக்கு இந்த தீர்ப்பானது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் இவ்வாறான அவதூறு வழக்குகள் வேறு சில அன்பர்களால் நீதி மன்றங்களில்கனடாவில் சமூக ஊடகங்களை நடத்தும் வேறு சிலருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தீர்ப்புக்கள் விசாரணைகளுக்குப் பின்னர் வெளிவரும் என்றும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
Citation :Sabaratnam V Mooka ,2022 ONSC 4779
Court File No :CV -19-00633610-0000 Date: 2022 August 18
Citation :Sabaratnam V Mooka ,2022 ONSC 6552
Court File No :CV -19-00633610-0000 Date: 2022 November 22